News April 16, 2024
புதுக்கோட்டையில் வாரச்சந்தைகள் மாற்றம்

புதுக்கோட்டை வாரச்சந்தை தேதி மாற்றம் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று
தமிழகத்தில் மக்களவை பொது தேர்தல் நடைபெறுவதை
முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சி வாரச்சந்தை, ஆட்டு
சந்தை, பசு மாடு சந்தை, காய்கறி, மீன் சந்தை
18-04-2024 வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News March 7, 2026
புதுக்கோட்டையில் முதல்வர், துணை முதல்வர் போட்டியிட மனு

புதுக்கோடை M.L.A வை.முத்துராஜா, திமுக நிர்வாகிகளிடம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனு வழங்கினார். அதில், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News March 7, 2026
புதுக்கோட்டை: சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருந்து பள்ளத்து விடுதியை சேர்ந்த சிறுவன் 17 வயது சிறுவன் கொத்தமங்கலம் சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக்கை வேகமாக இளம்பருதி ஓட்டியதால், பின்னால் அமர்ந்து சென்ற லோகேஷ்(13) என்ற சிறுவன், நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் லோகேஸ் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
News March 7, 2026
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06) இரவு 10 முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


