News October 11, 2025
தீபாவளிக்கு 9 நாள்கள் விடுமுறை

தீபாவளிக்கு எக்ஸ்ட்ரா 2 நாள் லீவு கேக்கலாம்னு நாம யோசிக்கும் போது, கம்பெனியே சம்பளத்தோடு 9 நாள் லீவு கொடுத்தா எப்படி இருக்கும்? டெல்லியில் உள்ள Elite Marque நிறுவன சி.இ.ஓ, தன் அலுவலக ஊழியர்களுக்கு அக்.18 முதல் 26 வரை 9 நாள் லீவு கொடுத்து, குடும்பத்துடன் கொண்டாடுங்கள் என அறிவித்தது, தற்போது SM-ல் வைரலாகியுள்ளது. இதற்கு ‘இவரல்லவா பாஸ்’ என பலரும் கமெண்ட் செய்கின்றனர். உங்க ஆபீசில் எத்தன நாள் லீவு?
Similar News
News October 12, 2025
MS தோனி பொன்மொழிகள்

*உங்களின் ஒரு வெற்றி, ஆயிரம் விமர்சனங்களுக்கான முற்றுப்புள்ளி. *நூறு சதவிகித உழைப்பை கொடுத்தப் பின்னர், அதன் முடிவைப் பற்றி கவலைப்படாதீர்கள். *கடைசி நிமிடத்தில் கூட எதாவது அதிசயம் நடக்கலாம். அதனால், தன்னம்பிக்கையை இழக்காதே. *உங்கள் தனித்திறன் என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்களுடையதாகிவிடும். *திட்டம் சரியில்லை என்றால், திட்டத்தை மாற்றுங்கள். இலக்கை அல்ல.
News October 12, 2025
2027 உலக கோப்பையில் விளையாட விருப்பம்: ஜடேஜா

2027 உலக கோப்பையில் விளையாட விரும்புவதாக ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா ODI தொடருக்கு தான் தேர்வாகாதது குறித்த காரணத்தை கேப்டன், பயிற்சியாளர், தேர்வுக்குழு கூறியதாக குறிப்பிட்ட அவர், வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக செயல்பட்டு 2027 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற முயற்சிப்பேன் என்றும் கூறினார். மேலும் ODI உலக கோப்பையை வெல்வதே தனது கனவு எனவும் பேசியுள்ளார்.
News October 12, 2025
10 விஜய் வந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது: வீரபாண்டியன்

தவெக, அதிமுக சேர்ந்தாலும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 10 எடப்பாடி, 10 விஜய், 10 அண்ணாமலை சேர்ந்து வந்தாலும் கூட தேர்தலில் திமுக கூட்டணி அவர்களை தோற்கடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் எனவும் அவர் பேசியுள்ளார்.