News October 11, 2025
ஈரோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் இடமாற்றம்!

ஈரோடு எஸ்.பி அலுவலக வளாகத்தில் ஈரோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது. தற்போது எஸ்பி அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடங்கள், மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனை எஸ்.பி அலுவலகத்தின் பின்புறம் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள அறை, மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுக்கப்பட்டது.
Similar News
News October 17, 2025
பெருந்துறை அருகே வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்!

பெருந்துறை புங்கம்பாடியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக பெருந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு சென்று தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வாய்க்காலில் மிதந்த சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? தற்கொலை செய்தாரா? என்று விசாரிக்கின்றனர்.
News October 17, 2025
ஈரோடு:அலைய வேண்டாம் ‘வாட்ஸ்அப் ஆதார் சேவை’

மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 17, 2025
ஈரோடு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!