News October 11, 2025
ரோஹித் இனி அதிரடி காட்டுவார்: ஆஸி., வீரர்

ஆஸி.,க்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியா, அக்.19-ல் 3 போட்டிகள் கொண்ட ODI தொடரில் விளையாடுகிறது. இதில் கேப்டனாக ரோஹித் விளையாடாத நிலையில், அவருக்கான சுமை குறைந்திருக்கும், எனவே அவர் மைதானத்தில் அதிரடியாக விளையாடுவார் என்று ஆஸி.,ன் பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார். சிறந்த வீரர்களான விராட், ரோஹித் இருவரும் ஆஸி.,க்கு வந்து கடைசியாக ஒருமுறை விளையாட இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 12, 2025
10 விஜய் வந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது: வீரபாண்டியன்

தவெக, அதிமுக சேர்ந்தாலும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 10 எடப்பாடி, 10 விஜய், 10 அண்ணாமலை சேர்ந்து வந்தாலும் கூட தேர்தலில் திமுக கூட்டணி அவர்களை தோற்கடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் எனவும் அவர் பேசியுள்ளார்.
News October 12, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 486 ▶குறள்: ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. ▶பொருள்: ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.
News October 12, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க..