News October 11, 2025
சென்னை: உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை பல்கலையில், முனைவர் பட்ட மேலாய்வாளர் படிப்புகளான டி.எஸ்சி., டி.லிட் பட்டம், எல்.எல்.டி., மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள், https://www.unom.ac.in இணையதளத்தில் அக்.,15-க்குள் விண்ணப்பிக்கலாம் என பல்கலை கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 12, 2025
தீபாவளி பண்டிகைக்கு 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே நான்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. திருநெல்வேலி–செங்கல்பட்டு, செங்கல்பட்டு–திருநெல்வேலி, சென்ட்ரல்–போத்தனூர் மற்றும் எழும்பூர்–திருவனந்தபுரம் இடையே ரயில்கள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் இவை இயக்கப்படும். முன்பதிவு அக்டோபர் 12 காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
News October 12, 2025
மீன்கள் வர்த்தக மையத்தை திறந்து வைத்த முதல்வர்

கொளத்தூரில் ரூ.53கோடி மதிப்பீட்டில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் கட்டப்பட்டு வந்தது. இந்த மையத்தை இன்று மாலை 6.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மையத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News October 11, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (11.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*