News October 11, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹1,280 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.11) காலை ₹680 அதிகரித்தது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,425-க்கும், சவரன் ₹91,400-க்கு விற்பனையானது. இந்நிலையில், மீண்டும் சவரனுக்கு ₹600 அதிகரித்துள்ளது. இதனால் 1 கிராம் தங்கம் ₹75 அதிகரித்து ₹11,500-க்கும், சவரன் ₹92,000-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News March 22, 2026
CPM-க்கு 5 தொகுதிகள்தான்.. நீடிக்கும் இழுபறி

CPM, 5 தொகுதிகளில் போட்டியிட ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாகவும், அதற்கு நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை எனவும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் பேசிய அவர், தொகுதிகளைக் குறைத்தாலும் திமுக கூட்டணியை விட்டு CPM வெளியேறாது; 6 தொகுதிகள் வேண்டும் என்பதால் தாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார். நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
News March 22, 2026
மாதம் 21 முறை விந்தணுவை வெளியேற்றினால்..

சுயஇன்பம் மூலம் விந்தணுக்களை வெளியேற்றுவதால் ஆண்மைக்கு ஆபத்து என்ற பேச்சுகள் உலா வருகின்றன. இந்நிலையில், மாதத்திற்கு 21 முறை விந்தணுக்களை வெளியேற்றினால் ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சரின் ஆபத்து 30% குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விந்தணு வெளியேறும்போது புரோஸ்டேட் சுரப்பியில் தேங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் வெளியேற்றப்படுவதால், கேன்சர் பாதிப்பு குறைகிறதாம்.
News March 22, 2026
ஸ்டிக்கர் ஒட்டுகிறதா தவெக?

தவெக ஸ்டிக்கர் ஒட்டிய எவர்சில்வர் பாத்திரங்கள், பூஸ்ட் பாக்ஸ், குடிநீர் பாட்டில் என அடுத்தடுத்து சிக்குவது செய்திகளாக வெளியாகின்றன. ஆனால், மற்ற கட்சிகளும் ஹாட் பாக்ஸ் என பரிசுப் பொருள்களை வழங்கும்போது எப்படி தவெக மட்டும் ஹெட்லைனில் வருகிறது என்று தவெகவினர் கேள்வி எழுப்புகின்றனர். இது அரசியல் களத்தில் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?


