News April 16, 2024
அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அதிமுக சார்பில் நேற்று பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளரும், நன்னிலம் எம்எல்ஏ ஆர்.காமராஜ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். ஏப்ரல் 17ஆம் தேதியுடன் வாக்கு சேகரிப்பு நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
Similar News
News September 4, 2025
திருவாரூர்: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News September 4, 2025
திருவாரூர்: நுகர் பொருள் வாணிப கழகத்தில் தவெகவினர் மனு

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயம் செய்யும் நெல்களை கொள்முதல் நிலையத்தில் வைப்பதற்காக கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி மாவட்ட நுகர்பொருள் வாணிப அலுவலகத்தில்நேற்று (செப்டம்பர் 3) திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட தலைவர் மதன் மற்றும் திருவாரூர் மாவட்ட தவெகவினர் உடன் இருந்தனர்.
News September 4, 2025
திருவாரூரில் சுனாமி ஒத்திகை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட முத்துப்பேட்டை, தொண்டிய காடு மற்றும் இடும்பாவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று(செப்.4) காலை முதல் சுனாமி ஒத்திகை நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.