News October 11, 2025
உங்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்குதா?

சென்னை, கோவை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மாநில பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொசு அதிகம் உள்ள பகுதிகளில் மருந்து தெளிக்கவும், ஒரே இடத்தில் அதிக பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தால் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 நாள்களாக காய்ச்சல் குறையாவிட்டால் உடனே டாக்டரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News March 28, 2026
மீன்பிடி தடைக்கால நிதி ₹12,000 உயர்த்தப்படும்: டிடிவி

தமிழகத்தின் நிர்வாக வசதிகளுக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என TTV வாக்குறுதி அளித்துள்ளார். *மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ₹8000-லிருந்து ₹12,000-ஆக உயர்த்தப்படும் * மாற்றுத்திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ₹2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் * சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மின் கட்டணம் குறைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். TNElection2026
News March 28, 2026
சீமானுக்கு சவாலாக மாறும் தேர்போகி பாண்டி

காரைக்குடியில் சீமானுக்கு எதிராக அமமுகவின் தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார். 2021-ல் காரைக்குடியில் அமமுக சார்பில் தனித்து போட்டியிட்ட தேர்போகி பாண்டி 44,864 வாக்குகளை பெற்றார். திமுக கூட்டணி வேட்பாளர் சா.மாங்குடி 75,954, அதிமுக கூட்டணி வேட்பாளர் எச்.ராஜா 54,365 வாங்கினர். தற்போது அதிமுக – அமமுக கூட்டணி அமைத்துள்ளதால், அத்தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல் வெளியானது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தே வர்த்தகமாகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $110 (இந்திய மதிப்பில் ₹10,435) உயர்ந்து $4,493-க்கு விற்பனையாகிறது. இன்றைய வர்த்தக நேர முடிவிலும் இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், அடுத்த வாரமும் தங்கம் விலை ஏறுமுகத்திலேயே நீடிக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். டிரம்ப்பின் போர் நிறுத்த நீட்டிப்பும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.


