News October 11, 2025
விஜய்யை மறைமுகமாக சாடிய மோகன் ஜி

முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘தேசிய தலைவர்’. இந்த பட விழாவில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, Cringe, பூமர் என்று ஒதுக்காமல் பார்த்தால் தான் இன்றைய இளைஞர்கள் அரசியல்படுத்தப்படுவார்கள் என்றார். இல்லையென்றால், இன்று ஒரு நடிகரின் பின்னால் இருக்கும் இளைஞர்கள் போல் அரசியல்படுத்தப்படாமலே இருப்பீர்கள் என்று விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.
Similar News
News October 12, 2025
நீங்க எந்த பிரச்னையோடு போராடுறீங்க?

நீங்கள் தற்போது எந்த அறிகுறியுடன் போராடுகிறீர்கள்? பல உடல்நல பிரச்னைகளுக்கு எளிய முறையில் உண்ணும் உணவின் மூலம் தீர்வு காண முடியும். என்ன பிரச்னைக்கு என்ன சாப்பிடலாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News October 12, 2025
விஜய், அஜித் இடத்தை நிரப்ப முடியுமா?

‘DUDE’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்துள்ளார். இந்த இடத்திற்கு வர அவர்கள் 30 ஆண்டுகள் உழைத்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட பிரதீப், இன்னும் 30 ஆண்டுகளுக்கு பிறகே அவர்கள் இடத்தை யார் பிடிக்கிறார்கள் என்பது தெரியும் எனக் கூறியுள்ளார். பிரதீப்பின் ‘DUDE’ படம் அக்.17-ல் ரிலீசாக உள்ளது.
News October 12, 2025
ஒரே நாளில் ₹1.65 லட்சம் கோடி காலி: டிரம்ப்பின் கைங்கரியம்

நவ.1 முதல் சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதனையடுத்து, US பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, பிட்காயின் சந்தைகள் 10%-க்கும் கீழாக குறைந்து ₹97.59 லட்சமாக சரிந்தது. ஒட்டுமொத்தமாக ₹1.65 லட்சம் கோடி சரிவை US பங்குச்சந்தைகள் கண்டுள்ளது. இது சர்வதேச அளவில் வர்த்தக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.