News October 11, 2025
LIC, SBI-ஐ தனியார்மயப்படுத்த முயற்சி: வங்கிகள் சங்கம்

LIC, SBI உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் உயர் பொறுப்புகளுக்கு, தனியார் துறை பிரதிநிதிகளை நியமிக்கலாம் என்ற அரசின் முடிவுக்கு வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU) கண்டனம் தெரிவித்துள்ளது. இது அரசு நிறுவனங்களின் உயர் பொறுப்புகளை தனியார்மயமாக்கும் முயற்சி என சாடியுள்ளது. தேசிய நிறுவனங்கள் லாப நோக்கத்திற்கான கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.
Similar News
News October 12, 2025
திமுகவின் நிலைய வித்துவான் TTV: அதிமுக

திமுகவின் நிலைய வித்துவானாக TTV மாறிவிட்டார் என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. EPS மீதான தனிப்பட்ட பொறாமையில் திமுகவிடம், TTV தன்மானத்தை அடகு வைத்துவிட்டதாகவும் அதிமுக சாடியுள்ளது. மேலும் கரூர் துயரில் CBI விசாரணையை எதிர்க்கும் திமுக அரசுக்கு TTV முட்டு கொடுப்பதாகவும், அவரது செயல்கள் ஜெயலலிதாவிற்கு துரோகம் இழைக்கும் வகையில் இருப்பதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.
News October 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 12, 2025
பிக்பாஸ் வீட்டில் முதல் எலிமினேஷன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முதல் வாரத்திலேயே 2 போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறினர். இந்த வார நாமினேஷனில் திவாகர், ஆதிரை, கலையரசன், வியானா, அப்சரா, பிரவீன் ராஜ், பிரவீன் காந்தி இடம்பெற்றிருந்த நிலையில், முதல் எலிமினேஷனாக பிரவீன் காந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக நந்தினியும் வீட்டில் இருந்து நடையை கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.