News October 11, 2025
பெரம்பலூர்: மின்வேலியில் சிக்கி 2 பேர் பலி

வெண்பாவூர் கிராமத்தில் மக்காச்சோள பயிரை காட்டுன்றியிடமிருந்து காப்பாற்றுவதற்காக பெரியசாமி என்பவர் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை பெரியசாமியும் பக்கத்துக்கு வயலைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரும் அந்த மின் வேலியில் எதிர்பாரா விதமாக சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
பெரம்பலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News March 10, 2026
பெரம்பலூர்: பாமகவினர் தீவிர பிரச்சாரம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பத்தூர், படைவெட்டிக்குடிக்காடு ஆகிய கிராமங்களில் பாமக ஒன்றிய செயலாளர் தனவேல் ஏற்பாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழக மக்களுக்கு, திமுகவினர் பொய் வாக்குறுதிகள் வழங்கியதாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசூரம் மூலம் தெரிவித்து, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
News March 10, 2026
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கடலூரில் கைது!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்த ஒகலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா (42). இவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட திட்டக்குடி போலீசார், தகவலறிந்து கருப்பையாவை கையும் களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.


