News October 11, 2025

518 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா!

image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 518/5 ரன்களை குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175 ரன்கள் குவித்து அவுட்டாகினார். கேப்டன் சுப்மன் கில் 129 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

Similar News

News October 12, 2025

நீங்க எந்த பிரச்னையோடு போராடுறீங்க?

image

நீங்கள் தற்போது எந்த அறிகுறியுடன் போராடுகிறீர்கள்? பல உடல்நல பிரச்னைகளுக்கு எளிய முறையில் உண்ணும் உணவின் மூலம் தீர்வு காண முடியும். என்ன பிரச்னைக்கு என்ன சாப்பிடலாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

News October 12, 2025

விஜய், அஜித் இடத்தை நிரப்ப முடியுமா?

image

‘DUDE’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன், தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்துள்ளார். இந்த இடத்திற்கு வர அவர்கள் 30 ஆண்டுகள் உழைத்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட பிரதீப், இன்னும் 30 ஆண்டுகளுக்கு பிறகே அவர்கள் இடத்தை யார் பிடிக்கிறார்கள் என்பது தெரியும் எனக் கூறியுள்ளார். பிரதீப்பின் ‘DUDE’ படம் அக்.17-ல் ரிலீசாக உள்ளது.

News October 12, 2025

ஒரே நாளில் ₹1.65 லட்சம் கோடி காலி: டிரம்ப்பின் கைங்கரியம்

image

நவ.1 முதல் சீனாவுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதனையடுத்து, US பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக, பிட்காயின் சந்தைகள் 10%-க்கும் கீழாக குறைந்து ₹97.59 லட்சமாக சரிந்தது. ஒட்டுமொத்தமாக ₹1.65 லட்சம் கோடி சரிவை US பங்குச்சந்தைகள் கண்டுள்ளது. இது சர்வதேச அளவில் வர்த்தக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!