News October 11, 2025

திருவள்ளூர் காவலர்களுக்கு அறிவுரை

image

திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று (11.10.2025) நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, நேரில் பார்வையிட்டார். காவலர்கள் ஒழுக்கம், பொறுப்பு உணர்வு, மக்களுடன் நடந்து கொள்வது போன்ற பணிப்பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முக்கிய அறிவுரைகள் வழங்கினார்.

Similar News

News March 14, 2026

அறிவித்தார் திருவள்ளூர் ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (மார்ச்.15) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முற்பகல் 120 தேர்வர்களும், பிற்பகல் 124 தேர்வர்கள் என மொத்தம் 244 பேர் தேர்வு எழுத உள்ளனர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 14, 2026

திருவள்ளுர்: நடுரோட்டில் திடீரென தீ பற்றி எரிந்த லாரி

image

திருத்தணி அருகே சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்து தீப்பற்றியது. நகரியில் இருந்து எம்-சாண்ட் ஏற்றி திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியை, ஓட்டுநர் பாஸ்கர் உடனே சாலையோரம் நிறுத்தினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி உயிர்தப்பினார்.

News March 14, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!