News October 11, 2025

மாட்டிறைச்சி காட்சியால் சென்சார் சான்றிதழ் மறுப்பு

image

‘ஹால்’ என்ற மலையாள படத்தில் மாட்டிறைச்சி காட்சி இடம்பெற்றதால் சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது. ஹீரோயின் ஒரு காட்சியில் தன் அடையாளத்தை மறைக்க பர்தா அணிவதை குறிப்பிட்டுள்ள CBFC, ஒரு நிறுவனத்தின் பெயரை மாற்றவும் பரிந்துரைத்துள்ளது. இதனால் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. கேரள HC-ஐ நாடியுள்ள படக்குழு, திரைக்கதையை புரிந்துகொண்டு CBFC சான்றிதழ் வழங்க முறையிட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

SPORTS 360°: பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் அபாரம்

image

*ISL கால்பந்தில் ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸை வீழ்த்தியது *மோகன் பகன் சூப்பர் ஜெயண்ட் 5-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது *PRAGUE செஸ் மாஸ்டர்ஸில் அரவிந்த் சிதம்பரம் 3-வது இடம் பிடித்தார் *வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் *ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில், லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

News March 7, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்:
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.

News March 7, 2026

திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது: பா.ரஞ்சித்

image

நாங்குநேரியிலும், சிவகங்கை இடைக்காட்டூரிலும் நடந்த சாதிவெறி தாக்குதல்கள் நெஞ்சை உறைய வைப்பதாக பா.ரஞ்சித் கூறியுள்ளார். தனது X பதிவில், கடந்த 6 ஆண்டுகளில் நெல்லையில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவானதை சுட்டிக்காட்டி, இப்பிரச்னைகளை எதிர்கொள்வதில் திமுக அரசும், போலீசும் தோல்வி அடைந்திருப்பதாக அவர் சாடியுள்ளார். எனவே, TN-ல் சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!