News October 11, 2025
அதிமுக – தவெக கூட்டணி என்பது வதந்தி: திருமா

தவெகவுடன் அதிமுக கூட்டணி என கூறுவது வெறும் வதந்தி என்று திருமாவளவன் கூறியுள்ளார். ஒருவேளை பாஜகவை அதிமுக கழற்றிவிடும் என்றால், கூட்டணி வைக்க நம்பகத்தன்மையற்ற கட்சியாக அதிமுக மாறிவிடும் என்ற அவர், அதிமுக, மீண்டும் பாஜகவை கழற்றிவிட தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சி கூட்டணி குறித்து திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் எதற்கு பேசுகின்றனர் என EPS கேள்வி எழுப்பியது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 5, 2026
BREAKING: விபத்தில் சிக்கிய இந்திய விமானம்?

அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் போர் விமானம் Sukhoi Su-30MKI விபத்தில் சிக்கியதாக சந்தேகம் எழுந்துள்ளது. கவுகாத்தியில் இருந்து புறப்பட்ட விமானம், மாலை 7 மணியளவில் கர்பி அங்லாங்கில் உள்ள சோகிஹோலா அருகே ரேடாரில் இருந்து மறைந்து மாயமானது. அது விபத்தில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடும் பணியை விமானப்படை தீவிரப்படுத்தியுள்ளது.
News March 5, 2026
தமிழக கவர்னர் மாற்றமா?.. பரபரப்பு தகவல்

தமிழ்நாடு கவர்னர் R.N.ரவியை மே.வங்க கவர்னராக நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக <<19307017>>மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்<<>>. R.N.ரவியை மாற்ற வேண்டுமென்று திமுக நீண்டகாலமாக கோரி வந்த நிலையில், 5 ஆண்டுகால ஆட்சி முடிவில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மே.வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்பாரா அல்லது நிரந்தரமாக மாற்றமா என்பதும் தெரியவில்லை.
News March 5, 2026
ஈரானுக்காக ரஷ்யா- சீனா வரவில்லை.. இதான் காரணமா?

இஸ்ரேலும், USA உடனான போரில் ஈரானின் கூட்டாளிகளான ரஷ்யாவும், சீனாவும் கண்டனம் தெரிவித்ததோடு சரி, ராணுவ ரீதியாக உதவ முன்வரவில்லை. ஏற்கெனவே உக்ரைனுடன் போர்புரிந்து வருகிறது ரஷ்யா. அதனால் மற்றொரு போர் வேண்டாம் என அந்நாடு ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சீனா USA-வை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை, மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையில் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.


