News October 11, 2025
பிரஸ்மீட்டில் பெண்களுக்கு இடமில்லையா?

டெல்லியில் நேற்று நடந்த தாலிபன் அமைச்சர் அமீர் கான் முத்தகியின் செய்தியாளர்கள் சந்திப்பில், பெண் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மண்ணில் தாலிபன்களின் பெண் ஒதுக்கல் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆப்கனில் பெண்கள் படிக்கவும், வேலை செய்யவும், பொதுவெளியில் நடமாடவும் தாலிபன்கள் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 12, 2025
ராசி பலன்கள் (12.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க
News October 12, 2025
RSS நினைவு நாணயம் SALE: முடங்கிய இணையதளம்

RSS அமைப்பின் 100-வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு 100 ரூபாய் நாணயத்தை அண்மையில் பிரதமர் வெளியிட்டார். இந்த நாணயம் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதை கொல்கத்தா நாணய சாலையின் இணையதளத்தில் (https://indiagovtmint.in/hi/product-category/kolkata-mint/) வாங்கலாம் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் நேற்று அறிவித்தது. இந்நிலையில், முதல் நாளே இணையதளம் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 12, 2025
விஜய்யுடன் கூட்டணிக்கு ரெடி: நயினார்

அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என EPS சூசகமாக பேசி வருகிறார். இந்நிலையில், NDA-வில் விஜய் இருப்பாரா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். தங்கள் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ள தயார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜனவரிக்கு பிறகு எல்லாவற்றுக்கும் முடிவு வரும் என்றும் நயினார் கூறியுள்ளார். அதிமுக+பாஜக+தவெக கூட்டணி உருவாகுமா?