News October 11, 2025

BREAKING: விஜய் எடுத்த அதிரடி முடிவு

image

கரூர் சம்பவம், தவெக – அதிமுக கூட்டணி சர்ச்சை, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளின் நிலை குறித்து மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்தடுத்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இன்று (அ) நாளைக்குள் விஜய் தரப்பு விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, கரூர் துயர சம்பவத்திற்கு 16 நாள்கள் துக்கம் அனுசரித்து வருவதாகவும், விரைவில் பேசுவோம் எனவும் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.

Similar News

News October 11, 2025

3 மாதம் இலவசம்.. செல்போன் ரீசார்ஜ் ஆஃபர்

image

தீபாவளி பரிசாக 3 மாதம் ஹாட் ஸ்டார் சேவையை இலவசமாக வழங்கும் ரீசார்ஜ் ஆஃபரை ஜியோ வழங்கியுள்ளது. ₹445-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு, *தினமும் 2 GB டேட்டா *அன்லிமிட்டெட் கால் *தினமும் 100 SMS *SONYLIVE உள்ளிட்ட சுமார் 10 OTT சப்ஸ்கிரிப்சன் *ஹாட் ஸ்டார் மொபைல்/டிவி 3 மாத சந்தா *அன்லிமிட்டெட் 5G சேவை கிடைக்கும். இதேபோல், ₹449 ரீசார்ஜ் திட்டத்திற்கும் 3 மாத ஹாட் ஸ்டார் சேவை இலவசம். SHARE IT.

News October 11, 2025

விஜய்யை கொன்று விடுவார்களா? திருமா பதில்

image

கரூருக்கு விஜய் சென்றால், அவரை கொல்ல வாய்ப்பிருப்பதாக நயினார் கூறியிருந்தார். ஆனால், மக்கள் செல்வாக்கு உள்ள விஜய், கரூருக்கு வந்து செல்வதில் என்ன பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். CBI விசாரணையை தவெக கோருவது ஏன் என்றும் வினவியுள்ளார். நயினார், தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், அண்ணாமலையே தலைவர் போல் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

News October 11, 2025

அடிக்கடி பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்? எச்சரிக்கை!

image

சிலர் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவர், சிலர் பசியெடுத்தாலோ போரடித்தாலோ பிஸ்கட் கொறிப்பார்கள். ஆனால், அதிகம் பிஸ்கட் சாப்பிடுவதால் உங்கள் உடல்நிலை பாதிக்கும் என்பது தெரியுமா? பிஸ்கட் தயாரிக்க மைதா, பாமாயில், சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இதய நோய்கள், BP, ஸ்ட்ரோக், உடல்பருமன், நீரிழிவு உள்பட பல பாதிப்புகள் உருவாக காரணமாகிறது. ஆகவே, அதிகம் பிஸ்கட் சாப்பிடுவதை தவிருங்கள்.

error: Content is protected !!