News October 11, 2025

கன்னியாகுமரி: கிராம ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்கள்

image

கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்கள் இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய 30 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள் www.tnrd.gov.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. இணையதள முகவரியில் இன்று முதல் (அக்.10) விண்ணப்பிக்கலாம். (விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.11.2025) *ஷேர் பண்ணுங்க

Similar News

News March 11, 2026

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை

image

பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் கெலன் முரேன். இவர் கன்னியாகுமரியில் நிலம் கிரையம் பெற்றுள்ளார். அந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மாவட்ட எஸ். பி. யிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 23 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 10, 2026

குமரி: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

இட்டகவேலி பகுதியைச் சேர்ந்தவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி வில்சன்(56).  இவர் அருகில் உள்ள வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கச்சென்றார். அப்போது மரத்தில் ஏறும்போது தென்னை ஓலை அருகில் உள்ள மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து மரத்திலிருந்து வில்சன் கீழே தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 10, 2026

குமரி: சிலிண்டர் புக் செய்ய முடியாமல் மக்கள் அவதி

image

நாகர்கோவிலில் கியாஸ் நிறுவனம் ஒன்றில் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கியாஸ் புக் செய்து வந்தனர். ஆனால் இன்று புக் செய்வதற்கு தொலைபேசியை தொடர்பு கொண்டால் தொடர்பு கிடைக்காததால் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கியாஸ் சிலிண்டர் புக் பண்ண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து நிறுவன பணியாளர்களிடம் கேட்ட போது தங்களாலும் புக் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

error: Content is protected !!