News October 11, 2025
நெல்லை: 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

மேலப்பாளையத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்தது. நீதிபதி சுரேஷ்குமார் குற்றம் சாட்டப்பட்ட முகமது அலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதித்தார்.
Similar News
News October 12, 2025
நெல்லை: போலியோ சொட்டு மருந்து முகாம் கலெக்டர் துவக்கம்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாளை (அக் 12) நடைபெறுகிறது. நாளை காலை 9.15 மணிக்கு பாளையங்கோட்டை காவலர் ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் பார்வையிட்டு தொடங்கி வைக்க உள்ளார். இதில் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
News October 12, 2025
நெல்லை மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக்.11) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News October 11, 2025
நாளை டிஆர்பி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டிஆர்பி தேர்வு நாளை நெல்லையில் 18 மையங்களில் நடைபெற இருக்கிறது. 70 மாற்றுத் திறனாளிகள் உட்பட 5527 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்துக்கு காலை 9. 30 மணிக்குள் சென்று விட வேண்டும். காலை 9.30 மணிக்கு மேல் செல்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இன்று அறிவித்துள்ளார்.