News April 16, 2024
காஞ்சி: சித்திரை மாத திருவிழா துவக்கம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கச்சபேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரும் திங்கள் 22ஆம் தேதி அன்று திருத்தேர் உற்சவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.
Similar News
News September 15, 2025
காஞ்சியில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்!

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
காஞ்சிபுரம் அளித்த கொடை “பேரறிஞர் அண்ணா”

பேரறிஞர் அண்ணா செப்.,15ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
▶1949 செப்டம்பர் 17ல் திமுக-வை ஆரம்பித்த இவர், 1957-ல் காஞ்சிபுரத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானார். ▶1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ▶1967ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வரானார். ▶1969ல் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார்.
அண்ணா கொண்டு வந்த முக்கியமான திட்டங்களை கமெண்டில் சொல்லிட்டு போங்க!
News September 15, 2025
குன்றத்தூரில் திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் பரிசு

குன்றத்தூர் மத்திய மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், B.L.A.2, B.D.A ஆலாசனைக் கூட்டம் நேற்று (செப்.,14) நடைபெற்றது. இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தல் பணியினை நடத்தி முடித்த நிர்வாகிகள் 600 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.