News October 11, 2025
ராகுல் காந்திக்கும் நோபல் பரிசு கிடைக்குமா?

வெனிசுலாவில் மக்களின் ஜனநாயக உரிமையை காக்க போராடி வரும் எதிர்கட்சி தலைவர் மரியாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மரியாவுடன் ராகுல்காந்தியை ஒப்பிட்டு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. மரியாவை போல ராகுல் காந்தியும், இந்தியாவில் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை காக்க போராடி வருவதாக அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 13, 2026
போட்டிப்போட்டு பரிசுகளை வாரி வழங்கும் திமுக, அதிமுக

தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், உடனே நடத்தை விதி அமலுக்கு வந்துவிடும். அதன்பின் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள்களை கொடுக்க முடியாது. இதனால், முன்கூட்டியே கோவை மக்களுக்கு திமுகவும், அதிமுகவும் பரிசுப் பொருள்களை வாரி வழங்குகின்றனவாம். திமுக சார்பில் பூத் வாரியாக வீட்டுக்கு ஒரு சில்வர் அண்டா வழங்க, அதற்கு போட்டியாக அதிமுகவும் மிகப்பெரிய பரிசுப் பொருள்களை கொடுக்கிறதாம்.
News March 13, 2026
ஈரான் போர்: 4-வது விமானத்தை இழந்த அமெரிக்கா

ஈராக்கில் அமெரிக்காவின் KC-135 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 6 பணியாளர்களை தேடும் பணி தொடர்வதாகவும், இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலால் அல்ல எனவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. 2 விமானங்கள் மோதியதில் ஒன்று விபத்துக்குள்ளாக, மற்றொன்று பாதுகாப்பாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது. இதற்குமுன் குவைத்தில் 3 போர் விமானங்களை அமெரிக்கா இழந்தது.
News March 13, 2026
இதுவா இந்தியாவின் ராஜதந்திரம்? ப.சிதம்பரம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தாலும், போரில் மரணித்தவர்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். USA உள்பட 12 நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ரஷ்யா & சீனா இதற்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை என்றும் அவர் கேட்டுள்ளார்.


