News October 11, 2025
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ₹680 குறைந்த நிலையில், இன்று(அக்.11) ₹680 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,425-க்கும், சவரன் ₹91,400-க்கு விற்பனையாகிறது.
Similar News
News October 11, 2025
9-ம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வி வேண்டும்: SC

தற்போது வரை 9-ம் வகுப்பு முதலே பாலியல் கல்வி பற்றிய பாடங்கள் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், போக்சோவில் கைதான 15 வயது சிறுவன் ஜாமின் கோரிய வழக்கின் விசாரணையின்போது, பருவம் அடைவதற்கு முன்பே பாலியல் கல்வியை கற்றுக் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று SC தெரிவித்துள்ளது. 9-ம் வகுப்புக்கு முன்பே பாலியல் கல்வியை வழங்கவும் SC வலியுறுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News October 11, 2025
வங்கி கடன்.. HAPPY NEWS

₹10 லட்சம் கடன் வாங்கிவிட்டு ₹6.5 லட்சம் திருப்பி செலுத்தினால் போதும். PMEGP திட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மத்திய அரசு இத்தகைய மானியத்தை வழங்குகிறது. கிராமப்புற பெண்கள், SC/ST பிரிவினர், முன்னாள் ராணுவத்தினருக்கு இந்த சலுகை பொருந்தும். 18 வயது பூர்த்தியானவர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியான KVIC, அருகிலுள்ள வங்கி கிளையை அணுகி பயன் பெறலாம். SHARE
News October 11, 2025
National Roundup: மருத்துவ மாணவி வன்கொடுமை

*கர்நாடக CM மாற்றம் குறித்த தகவலுக்கு டிகே சிவக்குமார் மறுப்பு
*மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை: எதிர்க்கட்சிகள் கண்டனம்
*டெல்லி – சென்னை நேரடி விமான சேவையை நவ.10-ல் துவங்குகிறது இன்டிகோ
*தற்கொலை செய்த ஹரியானா IPS அதிகாரியின் மனைவிக்கு சோனியா காந்தி கடிதம்
*AI ஆல் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் – நிதி ஆயோக் *வார இறுதியில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் – பிஹார் பாஜக.