News April 16, 2024
புத்தரின் பொன்மொழிகள்

✍நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். ✍பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான். ✍மனநிம்மதிக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன; ஒன்று விட்டு கொடுப்பது இல்லையெனில் விட்டு விலகுவது. ✍அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். ✍உங்கள் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நீங்களே காரணம்.
Similar News
News January 14, 2026
கூட்டணி.. ஒரே முடிவில் EPS, OPS, பிரேமலதா

பிரேமலதா (தேமுதிக), ஓபிஎஸ் ஆகியோர் தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறி வருகின்றனர். இதனால் தை முதல் நாளான நாளை கூட்டணி பற்றிய நிலைப்பாட்டை இருவரும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தைப்பொங்கல் வாழ்த்து கூறிய இபிஎஸ்ஸும், தை பிறந்தால் வழி பிறக்கும் என தெரிவித்துள்ளது அரசியல் கவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே, NDA கூட்டணியுடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
News January 14, 2026
மகளிருக்கு ₹5,000 மானியம்.. அரசு அறிவிப்பு

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் தொழில் தொடங்க அரசு மானியம் அறிவித்துள்ளது. இதற்கு, பிறப்புச் சான்று, BLP கார்டு(வறுமைக் கோட்டு அட்டை), வருமானச் சான்று ஆகிய ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்களுடன், தகுதியுடைய பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ₹10,000-க்கு மேல் உள்ள கிரைண்டர் வாங்க 50% அல்லது ₹5,000 மானியமாக வழங்கப்படுகிறது.
News January 14, 2026
பால் பொங்கல் செய்ய சிம்பிள் ரெசிபி

*நன்றாக கழுவிய பச்சரிசியுடன் பால் மற்றும் 4 டீஸ்பூன் நெய் சேர்த்து குழைவாக வேகவைக்கவும். *பின்னர் அதனுடன் ஏலக்காய் தூள், வெல்லம் சேர்த்து கிளறவும். *இதனுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான பால் பொங்கல் ரெடி. குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவர்.


