News October 11, 2025
பரமக்குடி: பைக் மோதியதில் ஒருவர் பலி

காட்டுப்பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் காமேஸ்வரன்(33). இவர் நேற்று மதியம் ஐ.டி.ஐ., எதிரில் உள்ள ஒர்க்க்ஷாப் முன்பு பெயின்ட் வாங்குவதற்காக ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அப்போது வேந்தோணியைச் சேர்ந்த கோகுல்(19), அந்த வழியாக டூவீலரில் வேகமாக ஆட்டோவில் மோதியதில் காமேஸ்வரன் பலியானார். கோகுல் காயங்களுடன் பரமக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 11, 2025
ராம்நாடு: G.H-ல் இவை எல்லாம் இலவசம்!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ராம்நாடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 / 04567-220508 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க
News October 11, 2025
இராம்நாடு மாணவர்கள் உதவித்தொகை திட்டம் APPLY NOW

இராமநாதபுரம் மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்
செயல்படுத்தப்படவுள்ளது. 2025 -26 ஆம் ஆண்டிற்கு இணையதளத்தில் (அக்.31) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். *SHARE IT
News October 11, 2025
இராம்நாடு: கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்

பாசிபட்டினம் கடற்கரை பகுதியில் ஒரு மூடை ஒன்று ஒதுங்கி உள்ளது. இது குறித்து மீனவர்கள் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் படையினர் மூட்டையை பிரித்து பார்த்ததில் 18 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். மொத்தம் ஒன்பது பொட்டலங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.