News April 16, 2024

பாஜகவுக்காக பகல் வேஷம் போடும் பழனிசாமி

image

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக எழுதிக் கொடுத்த பாத்திரத்தில் இபிஎஸ் அருமையாக நடிக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது அவரது சொந்த முடிவு இல்லை. அது பாஜகவின் உத்தரவு. இப்போது அந்தக் கட்சியின் பி-டீமாக அதிமுக இருக்கிறது. பழனிசாமியின் பகல் வேஷம் மக்களிடம் எடுபடப் போவதில்லை என்றார்.

Similar News

News August 14, 2025

நீட் கவுன்சலிங் பட்டியல் வெளியானது

image

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் (UG) முதல்கட்ட கவுன்சலிங் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சிபெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லூரிகளை வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் அணுக மருத்துவ கவுன்சலிங் கமிட்டி (MCC) அறிவுறுத்தியுள்ளது. ஒதுக்கீடு கடிதங்களை MCC இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். சீட் ஒதுக்கீடு பட்டியலை காண <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News August 14, 2025

தேர்தல் ஆணையத்தின் வரலாறும், செயல்பாடுகளும்

image

பிஹார் சிறப்பு வாக்காளர் திருத்தம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் எப்போது அமைக்கப்பட்டது? அதன் அதிகாரிகளாக யார் இருப்பர்? அவர்களின் பொறுப்புகள் என்னென்ன? வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்பவர்கள் யார் என்பது குறித்து மேலே உள்ள படங்களை Swipe செய்து அறிந்துகொள்ளுங்கள். Share செய்யுங்கள்.

News August 14, 2025

நைட் ஷிப்ட் வேலையா? இதை ஃபாலோ பண்ணுங்க!

image

*நைட் ஷிப்ட் பணி முடிந்ததும் ஒரு மணிநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள் (இசை கேட்கலாம், குளிக்கலாம்) *ஷிப்ட் எதுவானாலும், சாப்பிடும் நேரத்தில் மாற்றம் வேண்டாம் *புரதம் நிறைந்த காய்கறிகளை சாப்பிடவும் *உறங்கும் இடம் அமைதியாகவும் இருட்டாகவும் இருக்கட்டும் *உறங்கும் முன் காபி, டீ தவிர்க்கவும், மதுவை கட்டாயம் தவிர்க்கவும் *வெறும் வயிற்றில் உறங்க வேண்டாம் *தூங்கி எழுந்தபின் உடற்பயிற்சி செய்யலாம்.

error: Content is protected !!