News October 11, 2025

ராம்நாடு: ஆன்லைன் மோசடி – ரூ.51,000 மீட்பு

image

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவி என்பவர் இணையத்தின் மூலம் ரூ.51,000 பணத்தை இழந்ததாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் விரைவான விசாரணை மேற்கொண்டு, இழந்த ரூ.51,000 பணத்தையும் மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை இன்று (அக்.10) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உரிய நபரிடம் வழங்கினார்கள்.

Similar News

News October 11, 2025

ராம்நாடு: G.H-ல் இவை எல்லாம் இலவசம்!

image

ராமநாதபுரம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் ராம்நாடு மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04322-221733 / 04567-220508 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க

News October 11, 2025

இராம்நாடு மாணவர்கள் உதவித்தொகை திட்டம் APPLY NOW

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இத­ர­ பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், பொருளாதாரத்தில் பின்­தங்­கியவர்­கள், சீர்­ம­ர­பினர் ஆகிய பி­ரிவு­க­ளைச் சேர்ந்­த­ மாணவர்­களுக்­கு­ பிர­த­ம மந்­திரியின் கல்வி உ­த­வித்­தொகை­ திட்­டம்
செயல்­படுத்­தப்­ப­ட­வுள்­ளது. 2025 -26 ஆம் ஆண்டிற்­கு­ இணையதளத்தில் (அக்.31) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். *SHARE IT

News October 11, 2025

இராம்நாடு: கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலங்கள்

image

பாசிபட்டினம் கடற்கரை பகுதியில் ஒரு மூடை ஒன்று ஒதுங்கி உள்ளது. இது குறித்து மீனவர்கள் கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல் படையினர் மூட்டையை பிரித்து பார்த்ததில் 18 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். மொத்தம் ஒன்பது பொட்டலங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!