News October 11, 2025

ஈரோடு: மனைவியை எரித்துக் கொன்ற கணவன்

image

ஈரோடு கே கே நகர் பகுதியை சேர்ந்த குமரேசன்(41) ஆட்டோ டிரைவர் ஆவார். இவருடைய மனைவி ரேவதி, குடும்ப தகராறில் குமரேசன் கடந்த 15. 9.2019 அன்று மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மனைவி ரேவதி உயிரிழந்ததை அடுத்து ஈரோடு தாலுகா போலீசார் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். நேற்று நீதிபதி சொர்ண குமார் குமரேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Similar News

News October 17, 2025

பெருந்துறை அருகே வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்!

image

பெருந்துறை புங்கம்பாடியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக பெருந்துறை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அங்கு சென்று தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வாய்க்காலில் மிதந்த சடலத்தை மீட்டனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? தற்கொலை செய்தாரா? என்று விசாரிக்கின்றனர்.

News October 17, 2025

ஈரோடு:அலைய வேண்டாம் ‘வாட்ஸ்அப் ஆதார் சேவை’

image

மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 17, 2025

ஈரோடு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!