News October 11, 2025
போர் நிறுத்தம்: பயணத்தை தொடங்கிய பாலஸ்தீனியர்கள்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். இஸ்ரேல் படைகள் பின்வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் சற்று நிம்மதியோடு பாலஸ்தீனியர்கள், தங்களது சொந்த இடங்களுக்கு சாரை சாரையாக திரும்புகின்றனர். புகைப்படங்களை பார்க்க SWIPE செய்யவும்.
Similar News
News October 11, 2025
இந்தியாவுக்காக சதம்.. டாப்பில் கில்!

இந்தியாவுக்காக WTC தொடரில் அதிக சதங்களை அடித்த வீரராக சுப்மன் கில் மாறியுள்ளார். அவர் 71 இன்னிங்ஸில் 10 சதங்களை அடித்துள்ளார். 2-வது இடத்தில் ரோஹித் சர்மா (9 சதங்கள்), 3-வது இடத்தில் ஜெய்ஸ்வால் (7 சதங்கள்) உள்ளனர். அதே நேரத்தில், ஒரு ஆண்டில் இந்திய கேப்டனாக 5 சதங்களை அடித்த கோலியின் சாதனையையும் கில் இன்று சமன் செய்துள்ளார். இருப்பினும், இச்சாதனையை கோலி இரு முறை (2017, 2018) படைத்துள்ளார்.
News October 11, 2025
AI ஆல் கடுப்பான பிரியங்கா மோகன்

AI-ஐ படைப்பு திறனுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தவறான செயல்களுக்கு அல்ல என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். இவரது சில கிளாமர் போட்டோஸ் வைரலான நிலையில், அவை AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று பிரியங்கா விளக்கமளித்துள்ளார். இவ்வாறான போலி போட்டோஸை ஷேர் செய்வதையோ, பரப்புவதையோ நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக, ரஷ்மிகா உள்ளிட்ட சிலரின் AI போட்டோஸும் வெளியாகின.
News October 11, 2025
சமூகநீதியை திமுக புதைத்துவிட்டது: அன்புமணி

கடந்த 37 ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கிடைத்த 3 வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை திமுக குழி தோண்டி புதைத்துவிட்டதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டத்தை போட்டு சாதியை ஒழிக்க முடியாது என்ற அவர், அரசாணைகளை வெளியிடுவதன் மூலம் அவற்றை சாதிக்க முடியாது என சாடியுள்ளார். தெரு, ஊர்களில் உள்ள சாதிப் பெயரை மாற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்த நிலையில், அன்புமணி இவ்வாறு கூறியுள்ளார்.