News October 11, 2025
குணமடைந்தார் நல்லக்கண்ணு

மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். வயது மூப்பினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் பல நாள்களாக செயற்கை சுவாச சிகிச்சையிலும், தீவிர சிகிச்சை பிரிவிலும் இருந்த அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளார். முன்னதாக, தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நல்லக்கண்ணு நன்றி தெரிவித்தார்.
Similar News
News October 11, 2025
AI ஆல் கடுப்பான பிரியங்கா மோகன்

AI-ஐ படைப்பு திறனுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தவறான செயல்களுக்கு அல்ல என்று பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். இவரது சில கிளாமர் போட்டோஸ் வைரலான நிலையில், அவை AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று பிரியங்கா விளக்கமளித்துள்ளார். இவ்வாறான போலி போட்டோஸை ஷேர் செய்வதையோ, பரப்புவதையோ நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக, ரஷ்மிகா உள்ளிட்ட சிலரின் AI போட்டோஸும் வெளியாகின.
News October 11, 2025
சமூகநீதியை திமுக புதைத்துவிட்டது: அன்புமணி

கடந்த 37 ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கிடைத்த 3 வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை திமுக குழி தோண்டி புதைத்துவிட்டதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டத்தை போட்டு சாதியை ஒழிக்க முடியாது என்ற அவர், அரசாணைகளை வெளியிடுவதன் மூலம் அவற்றை சாதிக்க முடியாது என சாடியுள்ளார். தெரு, ஊர்களில் உள்ள சாதிப் பெயரை மாற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்த நிலையில், அன்புமணி இவ்வாறு கூறியுள்ளார்.
News October 11, 2025
BREAKING: முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேலூரில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் சீனாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பலகட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டதை அடுத்து, வீரமணிக்கு சிறுநீரகத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. டாக்டர்கள் கண்காணிப்பில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ஆதரவாளர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.