News October 11, 2025
தகுதி இல்லாதவர்களுக்கு நோபல் பரிசு: புடின்

நோபல் பரிசு மீதான நம்பகத்தன்மை போய்விட்டதாக புடின் தெரிவித்துள்ளார். உலகிற்கு ஒன்றுமே செய்யாத நபர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் தகுதியானவரா என தீர்ப்பளிக்கும் உரிமை தனக்கு இல்லை, ஆனால் அவர் உலகில் அமைதியை வளர்க்க முயற்சி மேற்கொண்டதாகவும், பல சிக்கலான விஷயங்களை தீர்த்து வைத்திருப்பதாகவும் புடின் பேசியுள்ளார்.
Similar News
News October 11, 2025
காதலுக்கு வயதில்லை: 21 வயது மூத்தவரை மணந்த இளைஞர்

ஜப்பானில் தன்னை விட 21 வயது மூத்தவரான மிடோரி(51) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் டோமியோகா (30) என்ற இளைஞர். ஆரம்பத்தில் இந்த காதலை மிடோரியின் குடும்பத்தினர் எதிர்த்த நிலையில், டோமியோகா தனது விடாமுயற்சியால் அவர்களை சம்மதிக்க வைத்துள்ளார். தற்போது மிடோரியின் மகளுக்கு தந்தையானது மட்டுமன்றி, அவரின் 4 பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவாகவும் மாறியுள்ளார்.
News October 11, 2025
டிரோன் எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் ராணுவம்

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு வான் பாதுகாப்பில் இந்திய ராணுவம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ‘SAKSHAM’ எனும் டிரோன் எதிர்ப்பு அமைப்பை இந்திய ராணுவம் உருவாக்கி வருகிறது. எதிரிநாட்டு டிரோன்களை கண்காணித்து, வழிமறித்து, தாக்கி அழிக்கும் இந்த அமைப்பு, முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பில் உருவாக்கப்படுகிறது. அடுத்த ஒரு ஆண்டில் இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 11, 2025
தீபாவளி பரிசாக ₹18,000.. தமிழக அரசு HAPPY NEWS

தீபாவளியையொட்டி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு, நகர கூட்டுறவு, ஊரக வளர்ச்சி வங்கிகளின் பணியாளர்களுக்கு தலா ₹18,000 வழங்கப்படும். மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு தலா ₹24,000 வழங்கப்படும். மாநில தலைமை கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கு தலா ₹30,000 கிடைக்கும்.