News October 11, 2025
அக்டோபர் 11: வரலாற்றில் இன்று

*1811–முதலாவது நீராவிப் படகுக் கப்பல் சேவை நியூயார்க், ஹோபோகன் இடையே தொடக்கம். *1826 – எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள். *1902–அரசியல்வாதி ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாள். *1942–நடிகர் அமிதாப் பச்சன் பிறந்தநாள். *1984–நடிகர் நிவின் பாலி பிறந்தநாள். *1987-விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை ஆபரேஷன் பவான் நடவடிக்கையை தொடங்கியது.
Similar News
News October 11, 2025
50,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் IT நிறுவனங்கள்

TCS நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கடந்த ஜூலையில் அறிவித்து ஊழியர்களை அதிர வைத்தது.. தற்போது பெரிய மற்றும் நடுத்தர IT நிறுவனங்கள், ஊழியர்களை ரிசைன் பண்ண சொல்லியும், உடனே வேறு வேலையை பார்க்க சொல்லியும் கமுக்கமாக வற்புறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 2025-26 நிதியாண்டில் 50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது.
News October 11, 2025
அம்பேத்கர் பெயர் இல்லாதது பற்றி அமைச்சர் விளக்கம்

சாதி பெயர்கள் நீக்கம் குறித்த அரசாணையில் மாற்று பெயர்களாக பெரியார், கருணாநிதி பெயர்கள் இருந்த நிலையில், அம்பேத்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெறாதது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்நிலையில், அரசாணையில் இடம்பெற்றது பரிந்துரை பெயர்கள் மட்டுமே, பிற தலைவர்களின் பெயர்களையும் வைக்கப்படலாம் என தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். 21 நாள்களில் ஊர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்படும் என்றார்.
News October 11, 2025
நல்ல சம்பளத்துடன் மத்திய அரசு வேலை வேண்டுமா?

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில்(SSC) 552 Head Constable பணியிடங்கள் காலியாக உள்ளன. 10-வது அல்லது +2 முடித்த 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கணினி வழி, உடற்தகுதி, மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட 5 தேர்வுகள் நடைபெறும். இந்த வேலைக்கு மாதம் ₹25,500-₹81,100 வரை கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் <