News October 11, 2025
மீண்டும் முற்றிய ராமதாஸ் – அன்புமணி மோதல்

பாமக மாநில இளைஞரணி தலைவராக முன்னாள் MLA கணேஷ்குமாரை அன்புமணி நியமித்துள்ளார். கடந்த வாரம் தான், இதே பதவியை GK மணியின் மகன் GKM தமிழ்க்குமரனுக்கு ராமதாஸ் வழங்கியிருந்தார். அப்பா – மகன் சண்டை முற்றுபெறாத நிலையில், பொறுப்பாளர்கள் நியமனம், நீக்கத்திலும் இருவரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, தனது தந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால், சும்மா விடமாட்டேன் என <<17968396>>அன்புமணி<<>> கொதித்துள்ளார்.
Similar News
News October 11, 2025
அடுத்து இந்த மாநிலங்களில் SIR பணிகள்

2026-ல் சட்டசபை தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில், முதற்கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 5 மாநிலங்களோடு சேர்த்து மேலும் சில மாநிலங்களில் SIR பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆனால், 2026-ல் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் முதற்கட்ட SIR பணிகள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளனர்.
News October 11, 2025
இட்லியின் மாஸ்! Doodle-ஐ மாற்றிய Google!

கலாச்சார & சமையல் முக்கியத்துவத்தை போன்றும் விதமாக Google இன்று, தென்னிந்திய பாரம்பரிய உணவான இட்லியை கொண்டாடி வருகிறது. அந்த Doodle-ஐ கிளிக் செய்தால், இட்லியின் மகத்துவமும், எப்படி செய்வது என்ற குறிப்புகளும் கிடைக்கின்றன. நம் ஊர் இட்லியை Google கொண்டாடுவதை பார்த்து நெட்டிசன்கள் ஆனந்தத்தில் உள்ளனர். என்ன இருந்தாலும் சுந்தர் பிச்சை நம்மூர்காரர் தானே. எல்லாம் சரி, இட்லிக்கு பெஸ்ட் சைட்- டிஷ் எது?
News October 11, 2025
விஜய் கட்சியுடன் கூட்டணி.. டிரெண்டாகும் போட்டோ

ADMK, TVK கூட்டணிக்கு காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாற்று கட்சி நிகழ்ச்சிகளில் TVK கொடியை பயன்படுத்த வேண்டாம் என நாமக்கல் நிர்வாகி கூறிய பிறகும் நேற்று மொடக்குறிச்சியில் EPS-யை TVK கொடிகளும் சேர்ந்தே வரவேற்றன. அதோடு, ‘நாளை நமதே! எங்களுடைய கஷ்டமான காலங்களில் தோள் கொடுத்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடியார்’ என விஜய் போட்டோவுடன் சேர்த்து சில பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.