News October 11, 2025
அக்.12 பாணாம்பட்டு ஏரியில் மாபெரும் மரம் நடும் விழா

விழுப்புரம் மாவட்டம், பாணாம்பட்டு ஏரியில் பசுமை விழுப்புரம் குழுவின் மூலமாக, இரண்டாம் ஆண்டு மாபெரும் மரம் நடும் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை அக்.12 அன்று காலை 8:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் 500 மரக்கன்றுகள் மற்றும் 1000 பனைமரம் விதையை நட உள்ளனர். இந்நிகழ்வில் சமூக சேவை அமைப்பினர், ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News October 11, 2025
விழுப்புரம்: 10th போதும், உள்ளூரில் அரசு வேலை!

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 கிராம பஞ்சாயத்து செயலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 நிறைந்த, விருப்பமுள்ளோர் இந்த <
News October 11, 2025
விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.11) “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் கானை VET கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, ECG, எக்கோ, அல்ட்ரா சவுண்டு & கண், மகப்பேறு மருத்துவம் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News October 11, 2025
விழுப்புரத்தில் கிராம சபை கூட்டம்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியாளர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் உள்ள ஜாதிப் பெயரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றி அலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து ஊராட்சிகளுக்கும் ஆணையிட்டுள்ளார்.