News October 11, 2025

தருமபுரி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

image

கே. பி. ஆர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

Similar News

News October 11, 2025

தருமபுரி: காளான் வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

image

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இன்று முதல் 11/10/25 முதல் 14/11/2025 வரை. காளான் வளர்ப்பு பற்றிய பயிற்சி தொடர்ந்து 26 நாட்கள் நடைபெற உள்ளது. வயதுவரம்பு 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி இருபாலாரும் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர். முனைவர் தெய்வமணி 9626674884 என்ற எண்ணில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

News October 11, 2025

உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம்

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம் வெளியிட்டுள்ளனர்.விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் சதிஸ் தகவல்

News October 11, 2025

தருமபுரி: உதவித்தொகை விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு!

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை (PM-YASASVI) திட்டத்தின் கீழ், ஒபிசி, இபிசி மற்றும் டிஎன்டி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (http://Scholarships.gov.in) வழியாக விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்தார். தகுதியுடைய மாணவர்கள் பள்ளி கல்வியில் சிறந்து விளங்கி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

error: Content is protected !!