News October 11, 2025
தென்காசி: தீபாவளி பண்டிகை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் மணிகண்டன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகங்களிலும் அக்டோபர் 11,12 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெற உள்ளதாகவும் காலை 10-11 மணி, மதியம் 12-1, மாலை 4-5 மணிவரை நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு.
Similar News
News October 11, 2025
தென்காசி மக்களே இனி அலைச்சல் இல்லை!

தென்காசி மக்களே, உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டும். நீங்கள் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம். உடனே இத்தகவலை SHARE பண்ணுங்க!
News October 11, 2025
தென்காசி: ஜாமீனில் வெளிவந்தவர் மீது கொலை முயற்சி

தென்காசியில் அதிமுக பிரமுகர் வேலியப்பன் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த முத்துராஜை, கிருஷ்ணகிரியில் கொலை செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கூலிப்படையை போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட வேலியப்பனின் அண்ணன் மகன் கார்த்திக், மற்ற 4 பேருடன் சேர்ந்து, கிருஷ்ணகிரி ஏரிக்கரையில் முத்துராஜை அரிவாள் மற்றும் பெட்ரோல் கேனுடன் துரத்தியது விசாரணையில் தெரியவந்தது.
News October 11, 2025
குற்றாலநாதர் கோயிலில் கொடியேற்றம்

தென்காசி குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜெயமணிசுந்தரம் பட்டர் தலைமையில் நடந்தது. தினமும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெற உள்ளது. அக்.12 பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 15 நடராசர் தாண்டவ தீபாராதனை, 16 அபிஷேகம், பச்சை சாத்தி தாண்டவம், 18 விஷு தீர்த்தவாரி, கேடய காட்சி நடைபெற உள்ளது.