News October 11, 2025

குடிநீர் வாரிய குறைகேட்பு கூட்டம்

image

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை கேட்பு கூட்டம் அனைத்து குடிநீர் வாரிய அலுவலகங்களிலும் சனிக்கிழமை (11.10.25) நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். திருவெற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் ஆகிய பகுதிகளில் இந்த அலுவலக கூட்டம் நடைபெறும்.

Similar News

News October 11, 2025

சென்னை: 12 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது

image

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பவரை 2003ல் கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் உமேஷ் என்பவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்தவர் 12 வருடங்களாக தலைமறைவானார். விசாரணைக்கு ஆஜராகாததால், அக்., 9ம் தேதி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அவரை தேடி வந்த போலீசார், நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

News October 11, 2025

சென்னை: குடிநீர், கழிவுநீர் குறித்து புகார் அளியுங்கள்

image

சென்னையில், தற்போது மழை பெய்து வருவதால், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் 044 – 4567 4567, 044 – 14420, 1916 மற்றும் 044 – 2845 4040 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். கட்டணமில்லா எண் 1916, தேசிய உதவி எண் 14420 போன்ற எண்களிலும் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது CMWSSB என்ற App-இல் புகார் அளிக்கலாம். புகார் அளிக்க இத்தனை வழிகள் உல்ளன. ஷேர் பண்ணுங்க.

News October 11, 2025

சென்னையில் பிரபல நடிகர் வீட்டிற்கு மிரட்டல்

image

சென்னை மந்தைவெளியில் உள்ள பிரபல நடிகர் எஸ்.வி சேகரின் வீட்டுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ச்சியாக சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!