News October 11, 2025

இந்தியாவின் மனநல தூதரானார் தீபிகா படுகோன்

image

இந்தியாவின் முதல் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டுள்ளார். உலக மனநல தினமான இன்று, இந்த அறிவிப்பை மத்திய சுகாதாரம் & குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசின் மனநல சேவைகள், விழிப்புணர்வை தீபிகா மக்களிடம் ஏற்படுத்துவார். இந்நிலையில், இச்சேவையை மோடி அரசின் கீழ் பெறுவது பெருமையாக இருப்பதாக தீபிகா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

Similar News

News October 11, 2025

பெண்கள் வேலை செய்ய விரும்பும் மாநிலங்கள்

image

சர்வதேச கல்வி மற்றும் திறனை அடையாளம் காணும், ‘விபாக்ஸ்’ அமைப்பு, நம் நாட்டின் திறன்கள் – 2025 அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், நம் நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வு முடிவுகளும் இடம்பெற்றுள்ளன. பெண்கள் பணிபுரிய அதிகம் விரும்பும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் எது? தமிழகம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பன குறித்து Swipe தெரிந்துகொள்ளுங்கள்.

News October 11, 2025

RJD-ல் இணைந்தார்.. பிஹார் அரசியல் புதிய திருப்பம்

image

பிஹார் அரசியல் களம் நாள்தோறும் அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது. எதிரணியில் உள்ளவர்களை பாஜக தங்கள் வசம் இழுத்து வரும் நிலையில், புதிய திருப்பமாக நிதிஷ்குமாரின் JDU-வில் இருந்து விலகிய Ex MP சந்தோஷ் குஷ்வாஹா, எதிர்க்கட்சியான RJD-ல் ஐக்கியமாகியுள்ளார். இது ஆளும் JDU – BJP கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல JDU தலைவர்கள் RJD-ல் இணைய உள்ளதாகவும் சந்தோஷ் குஷ்வாஹா கூறியுள்ளார்.

News October 11, 2025

மூலிகை: ஊமத்தையின் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி *ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் கொடுக்க, கீல்வாயு குணமாகும் *ஊமத்தை இலையை அரைத்து அரிசி மாவு சேர்த்து பற்றுப் போட்டால், வீக்க கட்டிகள் கரையும் *பிஞ்சு ஊமத்தங்காயின் உமிழ் நீரை அரைத்து, தலையில் தேய்க்க, பேன்கள் தொல்லை நீங்கி, முடி வளர்ச்சி அதிகரிக்கும் *ஊமத்தை இலையை உலர்த்தி அதன் புகையை உள்ளிழுத்து வெளியிட்டால், சுவாச காச நோய் குணமாகும்.

error: Content is protected !!