News October 10, 2025
மீண்டும் முன்ஜாமின் கோரிய N.ஆனந்த்

கரூர் துயரம் தொடர்பாக தவெக பொ.செ., N.ஆனந்த், துணை பொ.செ., CTR நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, முன்ஜாமின் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை மதுரை HC அமர்வு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மீண்டும் முன்ஜாமின் கோரி HC அமர்வில் N.ஆனந்த் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 11, 2025
உடல் கொழுப்பு குறைய இந்த யோகாசனம் பண்ணுங்க!

திரிகோணாசனம் தொடை & வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு குறைய உதவும் *கால்களை இடையே 3-4 அடி இடைவேளைவிட்டு நேராக நிற்கவும் *வலது காலை முன் எடுத்து வைக்கவும் *குனிந்து இடது கையின் பின்பகுதியால் காலின் கீழ்பகுதியைத் தொடவும் *உடலை வளைத்து வலது கையை மேலே நீட்டவும் *இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும் *இதே போல, கால்களை மாற்றி செய்யவும். SHARE IT.
News October 11, 2025
Business Roundup: லாபம் கண்ட சிமெண்ட் கம்பெனிகள்

*ஜூலை முதல் செப். வரையிலான 2-வது காலாண்டில் இந்திய சிமெண்ட் கம்பெனிகளின் லாபம் 4% அதிகரித்துள்ளதாக கணிப்பு. *மறுசுழற்சி கச்சா பொருட்கள் மீதான 18% ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜியமாக குறைக்க மறுசுழற்சி தொழிலாளர்கள் கோரிக்கை. *தீபாவளி பரிசாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ₹799 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. *TCS நிகர லாபம் 2-வது காலாண்டில் ₹12,075 கோடியாக உயர்வு. *சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.90 விற்பனை.
News October 11, 2025
BREAKING: கட்சி மாறுகின்றனர்.. அரசியல் பரபரப்பு

பிஹாரில் அடுத்த மாதம் நடக்கும் தேர்தலுக்காக BJP, JDU, RJD, INC, JS உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். இதனிடையே, பிஹார் மாநில BJP தலைவர் திலிப் ஜெய்ஸ்வால், RJD, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரை டஜன்(6) MLA-க்கள் பாஜகவில் இணைய உள்ளனர் என கூறி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால், யார் அந்த 6 பேர் என சம்பந்தப்பட்ட கட்சிகள் விசாரணையில் இறங்கியுள்ளதாம்.