News October 10, 2025

துணை நடிகையின் தாயை தாக்கிய நபர் கைது

image

சென்னையை அடுத்த ஆலப்பாக்த்தில் துணை நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், மற்றும் அவரது தாயாரையும் செருப்பால் அடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகராறை தொடர்ந்து, தற்போது பழிவாங்கும் நோக்கில் செருப்பால் அடித்ததாக கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.

Similar News

News October 11, 2025

பெண் மேலாளரை மிரட்டிய ஜிம் உரிமையாளர் கைது

image

திருமுல்லைவாயலை சேர்ந்த சீனிவாசன் என்பவர் சென்னையில் 15 உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வருகிறார். அதில் ஆழ்வார்பேட்டையில் உடற்பயிற்சி கூடத்தின் பெண் மேலாளரிடம் தனியாக ஜிம் வைத்து தருவதாக கூறி அப்பெண் பெயரில் வங்கியில் ரூ.1.75 கோடி கடன் வாங்கியுள்ளார். கடனை கேட்டபோது சீனிவாசன் மிரட்டியதாக இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

News October 11, 2025

சென்னையில் புதன் தோறும் அடையாள அட்டை வழங்கும் முகாம்

image

வட சென்னை மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலகத்தின் மூலம் இது வரை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் மாற்று திறனாளிகளுக்கு மருத்துவர் சான்றிதழுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்று வந்தது. இனி வரும் 15ம் தேதி முதல் புதன் கிழமை தோறும் நடைபெறும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News October 11, 2025

சென்னையில் 3400 தெருக்களுக்கு புதிய பெயர்

image

சென்னையில் சாதி பெயர்களை நீக்க மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது சென்னையில் 3400 தெருக்களில் உள்ள சாதி பெயர்களை கொண்ட இடங்களை மாநகராட்சி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த தெருக்களின் சாதி பெயர்களை நீக்கி புதிய பெயர்கள் சூட்ட மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் அக்.19 ஆம் தேதிக்குள் கோரப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!