News October 10, 2025
டிரம்ப்புக்கு நோபல் பரிசு கொடுக்காதது ஏன்?

டிரம்ப்புக்கு, சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன: *நோபல் பரிசுக்கு பெயர்களை முன்மொழிவது ஜனவரியிலேயே முடிந்துவிடுமாம். ஆனால், டிரம்ப் அப்போதுதான் பதவியேற்றார். *2024 அல்லது அதற்கு முன்பு மேற்கொண்ட சமாதான பணிகளுக்கே இந்த ஆண்டு நோபலுக்கு பரிசீலிக்கப்படும். ஆனால், டிரம்ப் சொல்லும் போர்நிறுத்தங்கள் எல்லாமே 2025-ல் நடந்தவையே. அடுத்த ஆண்டு கிடைக்குமா?
Similar News
News December 9, 2025
எடை குறைய வேண்டுமா? இதை முயற்சி செய்து பாருங்கள்!

எடையை குறைக்க நினைப்போருக்கு ட்ரை ஃப்ரூட்ஸ் உதவியாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். *பாதாமில் உள்ள நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள் நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை தூண்டாது. *வால்நட்டில் கலோரி அதிகமாக இருந்தாலும், அதுவும் பசி உணர்வை குறைக்கும். *பேரீச்சை உடலுக்கு அதிக சக்தி தருவதால் விரைவில் பசி எடுக்காது. இதன் மூலம் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். இதை நீங்களும் ட்ரை பண்ணுங்க & SHARE பண்ணுங்க.
News December 8, 2025
சிவாஜியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய ரஜினி

‘படையப்பா’ படம் குறித்து ரஜினி பகிர்ந்துள்ள வீடியோவில், சிவாஜிகணேசன் பற்றிய வருத்தமான சம்பவம் ஒன்றையும் அவர் விவரித்துள்ளார். அதில், நான் இறந்த பின் என் உடம்பு கூடயே நீ வரியான்னு சிவாஜி கேட்டதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார். அவரது ஆசைப்படியே சிவாஜி இறந்ததுக்கு பின் உடல் வைத்திருந்த வாகனத்தில் கடைசி வரை போனதாகவும் மனம் உடைந்தபடி அவர் கூறியுள்ளார்.
News December 8, 2025
BREAKING: கூட்டணி முடிவு.. அறிவித்தார் அண்ணாமலை

வலிமையான கூட்டணியோடு 2026 தேர்தலை சந்திப்போம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2 நாள்கள் அமித்ஷாவை சந்தித்து பேசிய அவர், மீண்டும் இன்று டெல்லி சென்றுள்ளார். முன்னதாக, கோவை ஏர்போர்ட்டில் பேட்டியளித்த அவர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என தனக்கு தோன்றவில்லை என குறிப்பிட்டார். மேலும், OPS, டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.


