News October 10, 2025
குழந்தைகளின் படிப்பில் இந்த தவறை பண்ணாதீங்க!

இப்போதெல்லாம், ChatGPT-ஐ வைத்துதான் பெரும்பாலான குழந்தைகள் HomeWork செய்கின்றனர். எப்படி பண்ணா என்ன, HomeWork முடிஞ்சா போதும் என்ற மனநிலையில் பெற்றோர்களும் அதை அனுமதிக்கின்றனர். இப்படி செய்வதால் உங்கள் குழந்தைகளின் கற்றல் திறன், நினைவாற்றல், சுய சிந்தனை பாதிக்கப்படுகிறது. எனவே, இனி HomeWork செய்ய அவர்கள் ChatGPT-ஐ பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள். இதை அனைத்து பெற்றோர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 11, 2025
இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகரிப்பு: அமித்ஷா

பாக்., & வங்கதேசத்திலிருந்து வந்த ஊடுருவல்காரர்களால் இந்தியாவில் முஸ்லிம் மக்கள்தொகை உயர்ந்துள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கே வாக்களிக்கும் உரிமை என்பதே SIR-ன் நோக்கம் என்று கூறினார். 1951-ல் 84% ஆக இருந்த இந்துக்கள் 2011-ல் (கடைசியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு) 79% ஆக குறைந்துள்ளனர். 9.8% ஆக இருந்த முஸ்லிம்கள் 14.2% ஆக உயர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News October 11, 2025
அழகிற்கு அழகு சேர்க்கும் கல்யாணி பிரியதர்ஷன்

கேரளாவில் தோன்றிய இந்த வண்ண மயில், தற்போது சூப்பர் ஹீரோயினாக அவதரித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. ரசிகர்களின் மனதில் இடம்பெற கவர்ச்சி காட்டத் தேவையில்லை, எளிமையாக தோன்றினாலே போதும் என்பதை நிரூபிக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இவருடைய அடுத்த 2 படங்களுமே கோலிவுட்டில் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.
News October 11, 2025
வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?

வீட்டில் குறிப்பிட்ட அளவு தான் தங்கம் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டம் இந்தியாவில் இல்லை. தங்கம் வாங்கியதற்கு உரிய ரசீதுகளையும், நிதி ஆதாரங்களையும் வைத்திருந்தால் திருமணமான பெண் 500 கிராம் தங்கமும், திருமணம் ஆகாத பெண் 250 கிராமும் வைத்திருக்கலாம். அதே போல ஆண்கள் 100 கிராம் தங்கம் வைத்திருக்கலாம். இந்த வழிகாட்டுதல்களை தங்கம் வைத்திருப்பதற்கான அளவுகோலாக வருமான வரித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.