News October 10, 2025
பிரபல நடிகர் மரணம்.. பரபரப்பு தகவல்

நடிகரும், பாடி பில்டருமான <<17961776>>வரீந்தர் குமான்<<>> ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு, அவர் பின்பற்றிய Vegan Diet தான் காரணம் என சிலர் கூறிவருகின்றனர். ஆனால், Vegan Diet பின்பற்றுவதால் இதயம் சார்ந்த பிரச்னைகள் வருவது குறைவு என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், எந்த diet-ஆக இருந்தாலும், சரியான அளவு புரதம், நார்ச்சத்து, மாவு சத்து இருப்பது அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். SHARE.
Similar News
News October 11, 2025
காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது: EPS

பல கட்சிகளுக்கு சென்று வந்தவரை மாநில தலைவராக்கி இருப்பதால் தான் காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டிருப்பதாக EPS விமர்சித்துள்ளார். விசுவாசமாக உழைத்தவர்களுக்கு எல்லாம் காங்கிரஸில் இடமில்லை என்றும் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பவரே மாநில தலைவர் பதவிக்கு வர முடிகிறதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுக பாஜக கூட்டணியை கண்டு திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பதறுவது ஏன் என EPS கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 11, 2025
ஜாக் மா பொன்மொழிகள்

*கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம். *சிறந்த நண்பர்களைத் தேடுவதற்கு பதில், உங்களுக்கு பொருத்தமான நபர்களைக் கண்டுபிடிக்க முயலுங்கள். *தோல்வியடைந்தவர்களே அதிகமாக குறைகளை சொல்லும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள், வெற்றியாளர்கள் அல்ல. *பொறுமை என்பது உங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாகும்.
News October 11, 2025
ரயிலில் எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம்?

இந்தியன் ரயில்வே விதிகளின்படி சாதாரண லக்கேஜ் ஆகவே தங்கம் கருதப்படுகிறது. இதனால் அனுமதிக்கப்படும் லக்கேஜ் எடையில் தங்கத்தை பயணிகள் எடுத்துச் செல்லலாம். ஒரு பயணி முதல் வகுப்பில் 70 கிலோ, 2 AC-ல் 50 கிலோ, 3 AC-ல் 40 கிலோ மற்றும் ஜெனரல் வகுப்பில் 35 கிலோ லக்கேஜ் எடையுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதை தாண்டி கூடுதல் எடையில் தங்கம் இருந்தால் கூடுதல் கட்டணமும், அபராதமும் செலுத்த நேரிடும்.