News October 10, 2025

கடலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

கடலூர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கு நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 14 அன்று பள்ளி மாணவர்களுக்கும், 15 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 11, 2025

கடலூர்: பிணமாக கரை ஒதுங்கிய சிறுவன் உடல்

image

சித்திரப்பேட்டை பகுதியை சேர்ந்த முகுந்தன்(16), கடந்த சில நாட்களுக்கு முன் சக மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது கடலில் தவறி விழுந்து மாயமானார். இதையடுத்து முகுந்தனை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ராசாப்பேட்டை கடற்கரையில் நேற்று சிறுவனின் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

News October 11, 2025

கடலூர் அருகே காவல் நிலையத்தில் அடிதடி

image

ஆனந்தகுடியைச் சேர்ந்த முகில் வேந்தன் என்பவர் என்னநகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் கர்ப்பமான நிலையில், அவரை திருமணம் செய்து கொள்ள முகில் மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காவல் நிலையம் வந்த இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

News October 11, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.10) இரவு 10 மணி முதல் இன்று (அக்.11) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!