News April 16, 2024

எதிர்க்கட்சியினரை என்ஐஏ மூலம் கைது செய்ய சதி!

image

தேர்தல் நேரத்தில் விசாரணை நிறுவனங்களை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்கப் பார்க்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கூச் பெஹாரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசிய அவர், “தோல்வி பயத்தில் உள்ள பாஜக, முதல்கட்ட வாக்குப் பதிவுக்கான நாள் நெருங்கும் சமயத்தில் என்ஐஏ விசாரணை முகமை மூலம் எதிர்க்கட்சியினரை கைது செய்ய சதித்திட்டம் தீட்டி வருகிறது” என்றார்.

Similar News

News August 26, 2025

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ ஏமாற்று வேலை: EPS

image

4 ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளபோது கவர்ச்சிகரமான திட்டங்களை ஸ்டாலின் அறிவிப்பதாக EPS சாடியுள்ளார். மேலும் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ என்பது ஏமாற்று வேலை என்றும் விமர்சித்துள்ளார். புதிய திட்டங்களை கொண்டுவராத திமுக, அதிமுகவின் திட்டங்களை முடக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

News August 26, 2025

CM ஸ்டாலின் இல்லை.. சேகர்பாபு, PTR பங்கேற்பு

image

ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சி இருப்பதால் கேரளாவின் ‘லோக அய்யப்ப சங்கமம்’ விழாவில் பங்கேற்கவில்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள CM பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், CM ஸ்டாலினுக்கு பதிலாக செப்.20 அன்று அமைச்சர்கள் சேகர்பாபு, PTR அந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, TN-ல் கோயிலுக்கு செல்லாத ஸ்டாலின், கேரள அரசின் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை கூறியிருந்தார்.

News August 26, 2025

வரலாற்றில் இன்று

image

*1910 – நோபல் பரிசு வென்ற அன்னை தெரசா பிறந்த தினம்
*1954 – நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண் பிறந்த தினம்
*1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது
*1972 – 22-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் தொடங்கியது
*1978 – விண்ணுக்கு பயணித்தார் முதல் ஜெர்மனி விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான்.

error: Content is protected !!