News October 10, 2025

விஜய் தாமதமாக வந்ததே அனைத்திற்கும் காரணம்: அரசு

image

கரூர் துயரம் தொடர்பாக SC-ல் தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக TN அரசு தரப்பு வாதிட்டுள்ளது. விஜய் தாமதமாக வந்ததே எல்லாவற்றிற்கும் காரணம் என குற்றஞ்சாட்டிய TN அரசு, SIT விசாரணை முறையாக நடைபெறுவதால் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. SIT அதிகாரிகள் ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்டனர், அரசு நியமிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News October 11, 2025

ஜாக் மா பொன்மொழிகள்

image

*கனவுகளின் அழகை நம்புபவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம். *சிறந்த நண்பர்களைத் தேடுவதற்கு பதில், உங்களுக்கு பொருத்தமான நபர்களைக் கண்டுபிடிக்க முயலுங்கள். *தோல்வியடைந்தவர்களே அதிகமாக குறைகளை சொல்லும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள், வெற்றியாளர்கள் அல்ல. *பொறுமை என்பது உங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாகும்.

News October 11, 2025

ரயிலில் எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம்?

image

இந்தியன் ரயில்வே விதிகளின்படி சாதாரண லக்கேஜ் ஆகவே தங்கம் கருதப்படுகிறது. இதனால் அனுமதிக்கப்படும் லக்கேஜ் எடையில் தங்கத்தை பயணிகள் எடுத்துச் செல்லலாம். ஒரு பயணி முதல் வகுப்பில் 70 கிலோ, 2 AC-ல் 50 கிலோ, 3 AC-ல் 40 கிலோ மற்றும் ஜெனரல் வகுப்பில் 35 கிலோ லக்கேஜ் எடையுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதை தாண்டி கூடுதல் எடையில் தங்கம் இருந்தால் கூடுதல் கட்டணமும், அபராதமும் செலுத்த நேரிடும்.

News October 11, 2025

பணமதிப்பு நீக்கத்தால் கடனை கட்டவில்லை: நடிகர்

image

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என ஷில்பா ஷெட்டியின் கணவரும் நடிகருமான ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு காரணமாக தனது வீட்டுப் உபயோகப் பொருட்கள் வியாபாரம் கடும் நஷ்டத்தை சந்தித்தாக அவர் கூறியுள்ளார். ₹60 கோடி ரூபாய் மோசடி புகாரில், ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மும்பை போலீசிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!