News October 10, 2025
National Roundup: இந்தியாவின் முதல் ரோபோடிக் ஆபரேஷன்

*இந்தியாவிற்கு தூதர்களை அனுப்ப ஆப்கன் முடிவு
*இருமல் சிரப் வழக்கில் கைதான ரங்கநாதன் ம.பி., கோர்ட்டில் ஆஜர்
*கர்வா செளத் விழாவில் பங்கேற்று பூஜை செய்த டெல்லி CM ரேகா குப்தா
*TenXu என்ற நிறுவனத்தை தொடங்கினார் சச்சின் டெண்டுல்கர்
*இந்தியாவின் முதல் ரோபோட்டிக் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை டெல்லி AIIMS-ல் வெற்றிகரமாக செய்யப்பட்டது.
Similar News
News October 11, 2025
ரயிலில் எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம்?

இந்தியன் ரயில்வே விதிகளின்படி சாதாரண லக்கேஜ் ஆகவே தங்கம் கருதப்படுகிறது. இதனால் அனுமதிக்கப்படும் லக்கேஜ் எடையில் தங்கத்தை பயணிகள் எடுத்துச் செல்லலாம். ஒரு பயணி முதல் வகுப்பில் 70 கிலோ, 2 AC-ல் 50 கிலோ, 3 AC-ல் 40 கிலோ மற்றும் ஜெனரல் வகுப்பில் 35 கிலோ லக்கேஜ் எடையுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதை தாண்டி கூடுதல் எடையில் தங்கம் இருந்தால் கூடுதல் கட்டணமும், அபராதமும் செலுத்த நேரிடும்.
News October 11, 2025
பணமதிப்பு நீக்கத்தால் கடனை கட்டவில்லை: நடிகர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என ஷில்பா ஷெட்டியின் கணவரும் நடிகருமான ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு காரணமாக தனது வீட்டுப் உபயோகப் பொருட்கள் வியாபாரம் கடும் நஷ்டத்தை சந்தித்தாக அவர் கூறியுள்ளார். ₹60 கோடி ரூபாய் மோசடி புகாரில், ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மும்பை போலீசிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News October 11, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 485 ▶குறள்: காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். ▶பொருள்: பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.