News October 10, 2025
+2 போதும்! மத்திய அரசில் ₹21,700 சம்பளத்தில் வேலை!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹21,700- ₹69,100 வரை வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
Similar News
News October 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 11, 2025
காசாவை சீரமைக்க ₹4.6 லட்சம் கோடி தேவை: ஐநா

இஸ்ரேலின் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள காசாவை சீரமைக்க ₹4.6 லட்சம் கோடி ($ 52 பில்லியன்) தேவைப்படும் என ஐநா கணித்துள்ளது. காசாவில் 80% உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஐநா இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.
News October 11, 2025
₹4,577 கோடிக்கு சென்னையில் வீடுகள் விற்பனை

CRE MATRIX தகவலின்படி ₹1-₹2 கோடி மதிப்பிலான வீடுகள் விற்பனையில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. 2025-ல் இதுவரை ஹைதராபாத்தில் 15,152 வீடுகள் ₹21,448 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. 2-ம் இடத்தில் உள்ள பெங்களூருவில் 14,617 வீடுகள் ₹20,695 கோடிக்கு விற்றுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் மும்பை, புனே, அஹமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. 6-வது இடத்தில் உள்ள சென்னையில் 3,401 வீடுகள் ₹4,577 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.