News October 10, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.
Similar News
News October 11, 2025
டிரம்ப்புக்கு மனிதாபிமான இதயம் உள்ளது: USA

நோபல் குழு அமைதியை விட அரசியலை முன்னிறுத்துகிறது என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் விமர்சித்துள்ளார். டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாத நிலையில், மலைகளை கூட தகர்த்தக்கூடிய சக்தி டிரம்ப்புக்கு உண்டு என்று சியுங் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப்புக்கு மனிதாபிமான இதயம் உள்ளது என்ற அவர், தொடர்ந்து அமைதி ஒப்பந்தங்களை மேற்கொள்வார் என்றும் கூறியுள்ளார்.
News October 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 11, 2025
காசாவை சீரமைக்க ₹4.6 லட்சம் கோடி தேவை: ஐநா

இஸ்ரேலின் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள காசாவை சீரமைக்க ₹4.6 லட்சம் கோடி ($ 52 பில்லியன்) தேவைப்படும் என ஐநா கணித்துள்ளது. காசாவில் 80% உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஐநா இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது.