News October 10, 2025
மணிக்கு 310 கிமீ வேகம்.. முதல் EV காரை அறிவித்த Ferrari

Ferrari நிறுவனம், EV கார் தயாரிப்பை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ‘Elettrica’ எனும் பெயரில் கார்கள், அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ளன. 4 சீட்டுகள் கொண்ட இந்த கார், ஒரு முறை சார்ஜ் போட்டால் 530 கிமீ பயணம், 310 Kmph வேகம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ளது. இக்கார்களின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ₹5.14 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 11, 2025
₹4,577 கோடிக்கு சென்னையில் வீடுகள் விற்பனை

CRE MATRIX தகவலின்படி ₹1-₹2 கோடி மதிப்பிலான வீடுகள் விற்பனையில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. 2025-ல் இதுவரை ஹைதராபாத்தில் 15,152 வீடுகள் ₹21,448 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. 2-ம் இடத்தில் உள்ள பெங்களூருவில் 14,617 வீடுகள் ₹20,695 கோடிக்கு விற்றுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் மும்பை, புனே, அஹமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. 6-வது இடத்தில் உள்ள சென்னையில் 3,401 வீடுகள் ₹4,577 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.
News October 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 11, 2025
டிரம்ப்புக்கு நோபலை அர்ப்பணித்த மரியா

தனக்கு கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவில் துன்பப்படும் மக்களுக்கும், தங்களது சுதந்திரத்துக்காக ஆதரவளித்த டிரம்ப்புக்கும் அர்ப்பணிப்பதாக மரியா கொரினா மச்சாடோ கூறியுள்ளார். வெனிசுலாவில் ஜனநாயகத்தை அடைவதற்கு டிரம்ப், USA மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் ஜனநாயக நாடுகள் ஆகியவை தங்களது முக்கிய கூட்டாளிகளாக உள்ளனர் என நம்புவதாகவும் மரியா தெரிவித்துள்ளார்.