News April 15, 2024
இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் சாம்பியன் காலமானார்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டெரெக் அண்டர்வுட் (78) இன்று காலமானார். 1963ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் இங்கிலாந்து அணியில் விளையாட தொடங்கிய அவர், 1987ஆம் ஆண்டு வரை சுமார் 24 ஆண்டுகள் விளையாடியுள்ளார். 86 டெஸ்ட் போட்டிகளில், அண்டர்வுட் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 29, 2025
இந்தியாவை கடுப்பேத்தும் PAK.. எல்லையில் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் 5-வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாக்., இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே எல்லை கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று இரவும் குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதியில் பாக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
கனடா வாக்கு எண்ணிக்கை.. முந்தும் லிபரல் கட்சி

கனடாவில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கனடா இன்னும் பாரம்பரியமான வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் PM மார்க் கார்னியின் லிபரல் கட்சியே முன்னிலையில் உள்ளது. அக்டோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வேண்டிய நிலையில் PM நாடாளுமன்றத்தை கலைத்ததால் தேர்தல் முன்கூட்டியே நடந்துள்ளது.
News April 29, 2025
IPL: அதிவேக சதமடித்து அசத்திய வீரர்கள்

ரன் மழை பொழியும் IPL தொடரில் அதிவேகத்தில் சதமடித்து பலர் சாதனை படைத்துள்ளனர். நேற்று ‘இளஞ்சிங்கம்’ வைபவ் சூர்யவன்ஷி அதிரடி காட்டியதால் அந்த பட்டியலை சற்று புரட்டிப் பார்க்கலாம். இதில், 30 பந்துகளில் சதமடித்து கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். வைபவ் சூர்யவன்ஷி(35), யூசுஃப் பதான்(37), டேவிட் மில்லர்(38), ஹெட்(39), பிரியன்ஷ் ஆர்யா(39), அபிஷேக் சர்மா(40) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.